ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் கலாநிதி ஹஸன் மெளலானாவுக்கு விசேட வரவேற்பு!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த 19ஆம் திகதி  ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் விஷேட வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள சம்மேளனத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தேசிய தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்பதுல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலாபூசணம் மௌலவி நாகூர் றஹீம், சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஸியாட் ஹமீத் உட்பட இந்நிகழ்வில் சம்மேளனத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஞாபகார்த்தமாக கலாநிதி ஹஸன் மௌலானாவினால் மரக்கன்று ஒன்றும் சம்மேளன தலைமையகத்தில் நாட்டப்பட்டதுடன், சம்மேளனத்தின் தேசிய தலைவர் அப்துல் ஐப்பார் மெளலவியின் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றன.

கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...