நாளாந்த மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது 76விகிதத்துக்கும் அதிகமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப அனல் மின் உற்பத்தி குறைந்துள்ளதுடன், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நாடு முழுவதும் வறண்ட காலநிலையுடன் காணப்பட்டது. இதனால், தேசிய மின்சக்தி அமைப்பு அனல் மின்சாரத்தை அதிகம் சார்ந்திருந்தது.
இதன் விளைவாக, மின்சார உற்பத்திக்காக நிலக்கரி மற்றும் எரிபொருளுக்கு திரும்ப வேண்டியிருந்தது. மின்சார உற்பத்தி செலவும் அதிகமாக இருந்தது.
எவ்வாறாயினும், இந்த நாட்களில் பெய்த கனமழையால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில், நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.