அவசரகால மருந்து கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்!

Date:

அவசரகால கொள்முதலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டும் மருந்துக் கொள்வனவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அறிவுறுத்தல் வளங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்த்தர்களினால் மாத்திரமே மருந்துகள் கொள்வனவு செய்யப்படும்.

மேலும், குறிப்பிட்ட விநியோகஸ்த்தர்கள் சில மருந்துகளை வழங்க முன்வருவதில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அத்தகைய சந்தர்ப்பத்தில், பொருத்தமான மருந்துகள் இந்திய அரசாங்க முகவர் மூலமாக கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...