இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக தகவல்!

Date:

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண ரயில் பாதைகளில் 50 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் 59 ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

இது தொடர்பில் ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இதிபோலகே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

புகையிரதப் பாதையின் சட்டவிதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் புகையிரத நிலையங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே இவ்வாறு ரயில்கள் தடம் புரண்டதற்கு முக்கியக் காரணம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் புகையிரதங்களில் மோதி விபத்துக்குள்ளான 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 353 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த விபத்துகளில் தற்கொலை முயற்சிகள், பாதுகாப்பற்ற ரயில்வேயில் பயணம் செய்தல், கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தி ரயில் பாதைகளில் பயணம் செய்தல் போன்றவை அதிகம் பதிவாகியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் 203 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...