இலங்கைக்கு வருகைத்தந்த நக்ஷ்பந்தியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவருக்கு கௌரவம்!

Date:

நக்ஷ்பந்தியா தரீக்கா சூஃபி வழியின் உலக ஆன்மீகத் தலைவர், அதிசங்கைக்குரிய மௌலானா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க்ஹ் மெஹ்மத் ஆதில் றப்பானி, நக்ஷ்பந்தியா தரீக்காவின் 41வது உலக ஆன்மீகத் தலைவர் நேற்றைய தினம் (01) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி ஆன்மீகத் தலைவர் மௌலானா ஷெய்க்ஹ் மெஹ்மத் ரப்பானி அவர்களை  கொழும்பு 07, நக்ஷபந்தியா தரீக்கா தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நக்ஷபந்தியா தரீக்காவின் சர்வதேச பல முரீதீன்கள் மற்றும் இலங்கை நக்ஷபந்தியா தரீக்காவின் பிரதம கலீfபா அல்-ஹாஜ் இஸ்ஸத் நிலார் நக்ஷபந்தி, நக்ஷபந்தியா தரீக்காவின் சிரேஷ்ட முரீதீன்களான அல்-ஹாஜ் டாக்டர்  ஹுஸ்னி காதர், அல்-ஹாஜ் ஹனீஃப் யூசுஃப், அல்-ஹஜ் ஸப்ரி கெளஸ், அல்-ஹாஜ் பேராசிரியர் இன்திகாப் ஸுபர், அல்-ஹாஜ் இம்தியாஸ், அல்-ஹாஜ் ஸெய்யித் ருக்னுதீன் மற்றும் பல நக்ஷபந்தியா தரீக்கா முரீதீன்கள் மற்றும் முஹம்மதியா TV நிர்வாகி அல்-ஹாஜ் நபீல் நெளஷாத் உட்பட முஹிப்பீன்கள் பலரும் இந்த நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...