உலக வங்கியின் நிறைவேற்று சபை நிதித்துறையின் பின்னடைவை வலுப்படுத்த இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி, இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு வலையின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.