இஸ்ரேலுடன் தூதரக தொடர்பை துண்டித்தது பொலிவியா!

Date:

இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து கொள்கிறது.

காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்தது. மேலும் ஐ.நா.வுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி, ஐ.நா. சபையில் பேசும்போது,

பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம் என்றார்.

இதற்கிடையே கொலம்பியா, சிலி ஆகிய நாடுகள் தங்களது இஸ்ரேலுக்கான தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன.

இதுதொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சு கூறும்போது காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கான சிலி தூதர் ஜார்ஜ் கர்வாஜலை சாண்டியாகோவிற்கு திரும்ப அழைக்க சிலி அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தது. 

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...