இஸ்ரேல்- ஹமாஸ் போரில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கை பிரஜையின் உடல் கொண்டுவரப்பட்டது

Date:

இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடல்  இன்று  அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேலிலிருந்து டுபாய் வழியாக, டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.37ற்கு நாட்டிற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

பூதவுடலை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர், விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.

அத்துடன், இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள், வென்னப்புவ பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....