ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்? பேராயர் ரஞ்சித் ஆண்டகையின் கூற்றை மறுக்கும் பேராயர் இல்லம்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக கொழும்பு பேராயார் இல்லத்தின் பொது மக்கள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவித்தார்.

“பேராயரை தான் சந்தித்தபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடத்தவில்லை எனவும், மத்திய கிழக்கு நாடொன்று குறிப்பாக இஸ்ரேல்தான் இதன் பின்னணியில் உள்ளது என கூறினார் என்று ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பரசரை சந்திப்பதற்காக பேராயர் தற்போது வத்திக்கானுக்கு சென்றுள்ளார். மேற்படி அறிவிப்பை தான் கண்டிப்பதாக அறிவிக்குமாறு அவர் எனக்கு தெரியப்படுத்தினார். பேராயர் ஒருபோதும் இப்படியானதொரு அறிவிப்பை விடுக்கவில்லை. அண்மித்த காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவும் இல்லை.

இஸ்ரேலின் தலையீட்டுடன்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என பேராயர் கூறவில்லை. சர்வதேச அழுத்தமொன்று இதன் பின்னணியில் இருந்திருக்ககூடும் என்றே கூறியிருந்தார். அதேபோல இத்தாக்குதலுடன் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் தொடர்புபடவில்லை எனவும் பேராயர் ஒருபோதும் கூறவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என்ற எமது சந்தேகம் மாறவில்லை.

ஹக்கீம் கூறும் கருத்தை கத்தோலிக்க சபை நிராகரிக்கின்றது. அது அப்பட்டமான பொய்யாகும். அரசியல் இலாபத்துக்காக ஹக்கீம் அவ்வாறு தெரிவித்தாரா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, பொய்யுரைக்காமல் தன்னால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்தை ஹக்கீம் மீளப்பெற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...