கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10இல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 17 வயதில் ஒரு மாணவன் உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும் இது தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
” நான்கு வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முன் பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன்மொழிந்துள்ளோம். நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டிப்பாக முன்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் .
யாருக்காவது தங்களுடைய குழந்தைகளை அவ்வாறு அனுப்ப முடியாவிடிடன், நாங்கள் அறிமுகப்படுத்தும் அமைப்பில், அருகிலுள்ள பாடசாலையில் அவர்களுக்கு போதுமான இடம் உள்ளது.
200க்கும் குறைவான குழந்தைகளை கொண்ட 4000 பாடசாலைகள் உள்ள நிலையில் 100க்கும் குறைவான குழந்தைகளுடன் 2, 900 பாடசாலைகள் உள்ளன.
கிராமிய அளவில் எளிதாக இலவச முன் பள்ளியை நடத்த எங்களால் வசதிகளை வழங்க முடியும். தற்போது, அந்த திட்டத்தை தேசிய கல்வி நிறுவனம் நிறைவு செய்துள்ளது.அவை கல்வி கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இது மாகாண மட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் தற்போதுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.அவர்கள் ஒரு சான்றிதழ் படிப்பு, ஒரு டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இதை நிறைவு செய்ய அவர்களுக்கு சிறிது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அறிமுகத்துடன் தற்போது 11ஆம் தரத்தில் மாணவர்கள் முகம்கொடுக்கும் கல்வி பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையை தரம் 10க்கு கொண்டு வரவுள்ளோம்.
நான்கு வயதில் இருந்து கணக்கிடும் போது, ஒரு குழந்தை 15 வயதில் கல்வி பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்கு தோற்றும். அவரது 17ஆவது வயதில், தனது உயர் தரப் பரீட்சையை எழுதுகிறார். இதன்போது முதுமை குறைகிறது.” என தெரிவித்துள்ளார்.