காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: திடீரென மனம் மாறிய இஸ்ரேல்:50 பணயக் கைதிகள் விரைவில் விடுவிப்பு!

Date:

பலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதறாக இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை முதல் 4 நாட்கள் காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த கத்தார் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்காவும் உதவியது.

இந்நிலையில் தான் கத்தார் எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து பணயக் கைதிகளை மீட்கும் வகையில் 4 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 4 நாட்களில் 50 இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுக்கவிக்க உள்ளது.

அதன்பிறகு அடுத்த 10 நாட்களுக்கு தினம் 10 பணயக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 நாட்கள் காசாவில் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு வீசக்கூடாது. வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது.

இராணுவ வாகனங்களின் இயக்கம் என்பது காசாவில் இருக்க கூடாது. தெற்கு காசாவில் ட்ரோன்கள் பறக்க கூடாது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் காசா பகுதியில் இருந்து எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம்.

இந்த போர் நிறுத்த நடவடிக்கையின்பாது மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு வரும் உதவிகள் அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இங்கு போர் தொடர்ந்து நடந்து வந்த மோதலுக்கு நடுவே காசா மக்களுக்கு இந்த போர் நிறுத்த நடவடிக்கை என்பது சற்று ஆறுதலான அம்சமாக உள்ளது.

அதோடு இந்த 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தமாக வரும் நாட்களில் மாற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது.

கடந்த மாதம் 7 ம் திகதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

அதோடு இஸ்ரேல் எல்லையை தகர்த்து அந்த நாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை சிறைபிடித்து சென்றது.

இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி தாக்குதலை தொடங்கினர்.

காசாவில் முதலில் வான்வெளி தாக்குதல் நடத்தப்ப்பட்டது. அதன்பிகு வடக்கு காசாவில் பல இடங்களில் இஸ்ரேல் படைகள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் 46வது நாளாக நடந்து வருகிறது.

இதுவரை காசாவில் 14 ஆயிரம் வரை பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1000க்கும் அதிகமானவர்களும் பலியாக உள்ளனர்.

மேலும் இன்னும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள், வீடுகள் என ஏராளமான கட்டடங்கள் இடிந்துள்ளன.

இப்படி போர் தீவிரமான நிலையில் அமெரிக்கா, இந்தியா, உள்பட பல நாடுகள் போரை இருதரப்பும் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் இஸ்ரேல் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் தான் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...