சிறார்களை ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல்: விசாரணை ஆரம்பம்!

Date:

இலங்கை சிறார்களை மலேசியா வழியாக வேறு நாடுகளுக்கு அனுப்பும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் முதலில் சட்ட ரீதியாக மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, போலி கடவூச்சீட்டு தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 13 சிறார்கள் இதுவரை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...