‘சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி : ஜோ பைடனின் விமர்சனத்தால் சர்ச்சை

Date:

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற ‘ஏபிஇசி’ (APEC Summit பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

அதன்பின் கலிபோர்னியா சென்ற ஜனாதிபதி ஜின் பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் இரு நாட்டு இராணுவ உறவு, ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான சந்திப்பொன்று நடந்த பின்புலத்தில் ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ள இந்த கருத்து சீனாவை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. நிச்சயமாக இதற்கு சீனா எதிர்வினையாற்றும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...