சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி பலி: விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமனம்

Date:

வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் சுவரொன்று உடைந்து வீழ்ந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எயார் மார்சல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்னவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதும், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி, வெஹெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு தண்ணீர் பெறுவதற்காக, குழாய்களுடன் கூடிய கட்டமைப்பானது கொங்கிரீட் செய்யப்பட்ட மதிலுடன் இணைத்து நிர்மாணிக்கப்பட்டிருந்தது. குறித்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த 5 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...