டிசம்பர் 23 மற்றும் 24 இல்: அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை!

Date:

இலங்கை பரீட்சைத் திணைக்ளத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ.எம். பைசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை சம்பந்தமான குறிப்புகள் மற்றும்
அறிவுறுத்தல்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படும். மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளம் (www.muslimaffairs.gov.lk) ஊடாகவும் அறிவிக்கப்படவுள்ளது.

இணையவழி மூலமாக மாத்திரம் கோரப்படவுள்ள விண்ணப்பங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 09.00 மணி முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 09.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு, “பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 180, ரீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.” என்ற முகவரியில் அல்லது 011-2667909 / 011-2669994 என்ற தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ளவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...