தனது ஓய்வை அறிவித்தார் இமாத் வாசிம்!

Date:

பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் இமாத் வசிம், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வூ பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறும் காலம் வந்துள்ளதாக இமாத் வசிம், தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.

55 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், 66 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இமாத் வசிம் விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இமாத் வசிம் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி இறுதியாக விளையாடியிருந்தார்.

34 வயதான இமாட் வசிம், ஒரு நாள் போட்டிகளில் 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதுடன், 986 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன், இருபதுக்கு இருபது போட்டிகளில் 65 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதுடன், 486 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...