அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட போட்டியில் கிரியுல்ல கல்வி வலயம் பனாவிடிய முஸ்லிம் வித்தியாலய மாணவி என். மர்யம் (இரண்டாம் பிரிவு) பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இம்மாணவி எஸ். நௌபர் மற்றும் என். நஸ்ரினா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.
மாணவிக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியை எம்.என்.எப். நிஸ்லா, பாடசாலை அதிபர் எம்.வை.எம். முஸம்மில் ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவியோடு காணப்படுகின்றனர்.
-எம்.யூ.எம்.சனூன்