தேர்தலில் போட்டியிடும் பங்காளதேஷின் பிரபல கிரிக்கெட் வீரர்ஷகிப் அல் ஹசன்!

Date:

பங்காளதேஷின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் பங்காளதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

பங்காளதேஷில் 12-வது நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7-ல் நடைபெறவுள்ளது.

இதில் ஷகிப் அல் ஹசன் ஆளுங்கட்சியான அவாமி லீக்கின் சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிடுகிறார். இது ஷகிப்பின் சொந்தத் தொகுதியாகும்.

2023 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஷகிப்பின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அந்தப் போட்டியில் இருந்து ஷகிப் விலகினார். தற்போது காயத்திற்கு சிகிச்சை பெற்றுவரும் அவர் மீண்டும் எப்போது விளையாட வருவார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

தேர்தலில் போட்டியிடுவதால் ஷகிப்பின் கிரிக்கெட் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதும் மிகப்பெரும் கேள்வியாக அமைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டுகளைக் கொண்ட தொடரில் வங்கதேசம் விளையாடவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்குப் பிறகு பங்காளதேஷ் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தேர்தலில் போட்டியிடுவதால் நியூசிலாந்துக்கு ஷகிப் செல்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.

சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பொறுப்பைத் துறந்த ஷகிப், டி20 கேப்டனாக தொடர்வதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜூனில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் ஷகிப்பின் தேர்தல் பிரவேசம், பங்காளதேஷ்  கிரிக்கெட் அணியைப் பாதிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பங்காளதேஷ் முன்னாள் கேப்டனான மஷ்ரஃப் மோர்டஸா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பங்காளதேஷ கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன், 2009 முதல் எம்.பி.யாக உள்ளார்.

அவர் மட்டுமல்லாமல் கிரிக்கெட்  சபை இயக்குநர் சஃபியுல் செளத்ரியும் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். பொதுவாழ்க்கையில் ஈடுபடாத ஷகிப் அல் ஹசன், அரசியல் பயணத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...