தொடர்பாடல் வழிமுறைகளும் செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பிலான ஊடக்கருத்தரங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (23) புத்தளம் எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெறும்.
பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான ‘நியூஸ்நவ்’ செய்தித் தளத்தின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மீள்பார்வை ஆசிரியர் பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா,’ மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத், ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹன நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.