நாடளாவிய ரீதியில் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

இதற்கமைய 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (02) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3 ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆம் திகதியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 8 ஆம் திகதியும், தென் மாகாணம் மற்றும் வட மத்திய மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 9 ஆம் திகதியும் குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி மேல் மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....