நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும்: கர்தினால் மெல்கம்

Date:

பாரம்பரிய அரசியல் காட்சிகளை நிராகரித்து நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  சர்வதேச கத்தோலிக்க ஊடக சேவை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே கர்தினால் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி, சர்வாதிகார வழியில் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளமை தெளிவாக தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் இத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டியது தேசப்பற்றுள்ள, மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்இதுவரை நாட்டை ஆண்டுவந்த பாரம்பரிய அரசியல் காட்சிகளை நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அரசியல், குடும்ப அரசியல், மதவெறி ஆகியவற்றை ஒழித்து நாட்டில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டியுள்ளதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூரைத்தகரம், 5,000 ரூபா அல்லது மதுபானம் ஆகியவற்றுக்கு வாக்களிக்கும் கலாசாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , பாரம்பரிய ஜனரஞ்சக அரசியல்வாதிகளுக்குப் பதிலாக நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவதை நோக்கி பயணிக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...