நில அதிர்வுகள் மூலம் சமூக மட்ட அமைப்புகள் மத்தியில் முன்னெடுக்கப்படக் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவலை பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, மற்றும் திருகோணமலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, “ஒரு வருட கால எல்லைக்குள் இருமுறை ஏற்பட்டுள்ள குறித்த நில அதிர்வு தொடர்பாக கலந்துரையாட குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிலிருந்து பொதுமக்களை காத்துக்கொள்ளவும் உயிராபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஊடாக அங்குள்ள சமூக மட்ட அமைப்புகள் மத்தியில் முன்னெடுக்கப்படக்கூடிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.” என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.