நீர்கொழும்பில் மீலாத் தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

Date:

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற இஸ்லாமிய தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (26) நடைபெற்றது.

நீர்கொழும்பு பெரியமுல்ல அஹதியா பாடசாலை ஏற்பாட்டிலும் வை.எம்.எம்.ஏ நீர்கொழும்பு கிளை இணை ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு மேரிஸ் ஸ்டெல்லா பாடசாலையின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர்,அகில இலங்கை சமாதான நீதவான், கல்வி அமைச்சின் இஸ்லாமிய கல்விப் பிரிவின் உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ரில்வான் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும் கௌரவ அதிதிகளாக அஹதியா பாடசாலையின் மத்திய சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம்.ஆர்.எம். சரூக், அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஷான் ஏ.ஹமீட் மற்றும், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் எம்.எஸ்.எம்.அன்வர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் அவர்கள் விசேட உரை நிகழ்த்தினார்.

விசேட அதிதியாக நீர்கொழும்பு-01 பொலிஸ் கண்காணிப்பாளர் டி.எச். எரிக் பெரேரா அவர்கள் கலந்துகொண்டதுடன் பெரியமுல்ல அஹதியா பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஹலீம் அபூசாலிஹ் வை.எம்.எம்.ஏ நீர்கொழும்பு கிளையின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ரம்ஸீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிராஅத், கஸீதா, தூஆ, மற்றும் பேச்சுப்போட்டிகள், உள்ளிட்ட இஸ்லாமிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற அதிபர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நீர்கொழும்பு பெரியமுல்ல அஹதியா குழுவின் செயற்குழு உறுப்பினர், சிட்டிசன் பத்திரிகையாளர், எம்.எஸ்.எஸ்.முனீர் இந்நிகழ்வுக்கு ஊடக பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...