நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்

Date:

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 4.38 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை அந்நாட்டு தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் மீண்டும் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...