பஹன மீடியா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் செய்யத் சாலிம் மௌலானா முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் ஆப்தீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(15) முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது சமயத்தலைவர்களுக்கு ஊடகத்துறை தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வுகள் மற்றும் மஸ்ஜிதுகளை சமூக முன்னேற்றத்துக்கான மத்திய நிலையங்களாக செயற்படுத்துவதற்கு அதன் நிர்வாகிகளை பயிற்றுவிப்பது மற்றும் அறிவூட்டல் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது பஹன மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முஜிப் சாலிஹ், முன்னாள் அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளரும் பஹன அகடமியின் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மட் மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ்.ஏ அஹமட், என்.மிலௌபர், ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.