வெல்லம்பிட்டி – வேரகொட கனிஷ்ட பாடசாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாடசாலையின் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி பயின்றுவந்த மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.