பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளுக்கு அடுத்த வருடம் முதல் சானிட்டரி நாப்கின்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியானது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக மூன்று இலட்சம் சிறுமிகளுக்கு இந்த சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் பின்னர் அது 10 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.