எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை புத்தளம்,ஸாஹிரா தேசிய பாடசாலையில் இலவசக் கல்வி மற்றும் தொழில் துறை வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கில் பின்வரும் தலைப்புகள் பற்றி பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட இருக்கின்றது.
அதற்கமைய 1. 2030 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் தொழில் துறைகள்.
2. குறுகிய காலத்தில் பட்டதாரியாகுவது எப்படி?
3. ஆங்கில அறிவின் முக்கியத்துவம்.
4. UK, Australia, Canada New Zealand, USA, Europe ஆகிய நாடுகளில் எவ்வாறு உயர்கல்வியினை தொடர்வது?
5. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் புலமை பரிசிலுக்கு
விண்ணப்பிப்பது எவ்வாறு? மற்றும்
UK Care Giver Visa, Job Visa, Canada Skill Visa பற்றிய விழிப்புணர்வுகள்.
6. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளக்கம்.
7. பல போலியான வெளிநாட்டு முகவர்களினால் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஆகவே எவ்வாறு போலியான நிறுவனங்களையும் முகவர்களையும் அறிந்து கொள்வது?
9. வெளிநாட்டில் மருத்துவம் மற்றும் சட்டக் கல்வி தொடர்பான தகவல்கள்.
10. சுயவிவர கோவையின் சரியான வடிவமைப்பு பிரதி அனைவருக்கும் வழங்கப்படும். (Sample CV)
இன்னும் பல பயனுள்ள கல்வி வழிகாட்டகள் வழங்கப்படவிருப்பதனால் உங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து பயன் பெற்று கொள்ளுங்கள். வருகைத் தரும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.