‘பெர்சி அபேசேகரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கையில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள்

Date:

இலங்கை அணியின் ஆதரவாளர் என கருதப்படம் பெர்சி அபேசேகரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடுகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளராக அறியப்பட்ட பெர்சி அபேசேகர கடந்த 30ஆம் திகதி தமது 87ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி இருந்ததுடன், அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே காலமானார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 5 மில்லியன் ரூபாவை பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வழங்கியிருந்தது.

பெர்சி அபேசேகர 1979 உலகக் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சர்வதேச போட்டிகளில் இலங்கைக் கொடியை உயர்த்தியவராவார்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கிலேயே இலங்கை அணி வீரரர்கள் இன்று கையில் கறுப்புப் பட்டியை அணிந்தவாறு விளையாடி வருகின்றனர்.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...