இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளனர்.
மலேசியாவின் பல்வேறு தேசியப் பல்கலைக்கழகங்களிலும் இந்த வாரம் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
அதற்கமைய மலேசியாவின் வரலாற்று புகழ் பெற்ற மலாயா பல்கலைக்கழகம் (UM), சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் மலேசியா (IIUM), போன்ற பல்கலைக்கழகங்களில் இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டம் பெற்றனர். அதன் விபரம் பின்வருமாரு
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில்
1. கலாநிதி ஏ.ஜே.எம். ஸிஹான்
ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் ஸிஹான் நளீமி Doctor of Philosophy in Fiqh & Usul Fiqh துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். இவர் ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்தவர்.
2. கலாநிதி எம். தாபித்
கிண்ணியாவை சேர்ந்த அஷ்ஷெய்க் எம். தாபித் ஹில்ரி அழர்கள் இஸ்லாமிய சட்டத் துறையில் (Doctor of Philosophy in Islamic Law) கலாநிதி பட்டம் பெற்றார்.
3. கலாநிதி கரீமா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அல் ஆலிமா கரீமா அவர்கள் அதியுச்ச திறமையை வெளிப்படுத்திமமைக்காக வழங்கப்படும் சிறந்த மாணவர் விருதுடன் (Best Student Award) ஆங்கில மொழி துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவர் காத்தான்குடியை புறப்படமாகக் கொண்டவர்.
4. கலாநிதி அப்றா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் துறை விரிவுரையாளர் கலாநிதி அல் ஆலிமா அப்றா இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீகத்துறையில் (Doctor of Philosophy in Islamic Thought and Civilization) கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்துக்குமான சர்வதேச நிர்வாகத்தில் (International Institute of Islamic Thought and Civilization) கலாநிதி பட்டம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார் இவர் உடதலவின்னையை சேர்ந்தவர்.
மலாயா பல்கலைக்கழகம்
5. கலாநிதி றிபாஸ்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இளம் விரிவுரையாளர் கலாநிதி றிபாஸ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதி முறைமை (Doctor of Philosophy in Islamic Banking and Finance) துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
33 வயதுக்குள் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்வதென்பது இலங்கையை பொறுத்த வரையில் சாதாரணமான விடயம் அல்ல இவர் அம்பாரை மாவட்டத்தின் பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர்
6. கலாநிதி நஸ்ரின்
பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நஸ்ரின் மாவனெல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். மலாயா பல்கலைக்கழகத்தின் கல்வித் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி அவர்களின் பாரியார் கலாநிதி நஸ்ரின் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Doctor of Philosophy in Information Technology) கலாநிதி பட்டம் பெற்ற இவர் விஷேட திறமையை வெளிப்படுத்தி Excellent Pass பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.