தேசிய மின் கட்டத்திற்கு 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் வகையில் 06 பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்தத் திட்டங்களின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் நில அனுமதியின் ஒப்புதலுக்கு உட்பட்டு, மாத இறுதிக்குள் அவற்றைத் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மதிப்பீடு செய்தல், ஒப்புதல் செயல்முறை மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்மூலம் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் பிற அனுமதிகளுக்கு உட்பட்டு அந்தத் திட்டங்களுக்கு மின்சாரம் இணைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் எக்ஸ் சமூக ஊடகங்க செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்ட 6 திட்டங்களின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 1110 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மற்றும் சூரிய சக்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.