ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50,000 அமெரிக்க டொலர் மற்றும் பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5,000 அமெரிக்க டொலர் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது “மைதான ஊழியர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. இந்த பணம் என்ன ஆனது” எனவும் அவர் கேட்டுள்ளார்.