மைத்திரி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, மற்றும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரின் சொத்து விபரங்களையே சமர்பிக்குமாறு மேற்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை முழுமைப்படுத்த முடியாத நால்வருக்கே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...