காஸாவிலிருந்து எகிப்திற்கு செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூதுவராலயத்தின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்திற்கு வெளியேறவுள்ளனர்.
காயமடைந்த பலஸ்தீனர்களின் முதல் குழுவினர் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் சென்றுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.