ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் தெரிவிப்பு

Date:

ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,

அமைச்சரவை ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என்றும், அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவது அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம், அல்லது அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதியில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். இது கடந்த காலத்தில் நடந்ததால், அதையே செய்யலாம் என நினைக்கும் சிலர் இங்கு உள்ளனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது நடைபெறாது” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...