லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

Date:

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ஆகும்.

மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.

மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.

உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...