குருநாகல் மாவட்டம் நிகவரடிய தேர்தல் தொகுதி வெல்பொதுவௌ கிராமத்தில் அல்ஹைராத் எனும் அஹதியா பாடசாலை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குருநாகல் அஹதியா சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி நிசாமுத்தீன் அவர்களும், செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.நிலூம் அவர்களும் பொருளாளர் மௌலவி எம்.எம். நவாஸ் மற்றும் குளியாப்பிட்டிய வலய அஹதியா பொறுப்பாளர் மௌலவி எம்.டி.எம்.ஜெலால்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்களான மௌலவி எம்.ஏ.எம். ரியாஸ் எஸ்.எச்.எம். தமீம் (நளிமி) மௌலவி யு.எல். சாஹுல் ஹமீத் ஆகியோரும் ஹைராத் அஹதியாப் பாடசாலையின் அதிபர் அபுல் ஹசன் (நளீமி) அவர்களும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் ஊர் ஜமாஅத்தினரும் கலந்துகொண்டனர்.
(தகவல்- மௌலவி எம்.டி.எம். ஜெலால்தீன் கபூரி குளியாப்பிட்டிய வலயப்பொறுப்பாளர்.)