இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்கள் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த 19ஆம் திகதி ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தினால் விஷேட வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள சம்மேளனத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தேசிய தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்பதுல் ஜப்பார், பொதுச் செயலாளர் கலாபூசணம் மௌலவி நாகூர் றஹீம், சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஸியாட் ஹமீத் உட்பட இந்நிகழ்வில் சம்மேளனத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.