ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்று நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய குறித்த குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.