2024 வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை!

Date:

2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரவு- செலவுத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் Fitch Ratings வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தரவுகளுக்கு அமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 வீதமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதனைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் Fitch Ratings நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவது சவாலானது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமான இலக்குகளை அடைய பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் மூலம் பொருட்களின் விலை 8.7 வீதம் அதிகரிக்கலாம் எனவும் Fitch Ratings நிறுவனம் கணித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவுகளை 14 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலதனச் செலவுகள் குறைக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் 3.3% பொருளாதார வளர்ச்சி வேகம் நிச்சயமற்றது எனவும் Fitch Ratings நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...