7 இலட்சம் பாவனையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிப்பு!

Date:

கடந்த 10 மாதங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 7,88,235 நுகர்வோரின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 481 நுகர்வோரின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நுகர்வோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6106 ஆகும்.

பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு – வரி அதிகரிப்பு, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், மின்கட்டணம் செலுத்துவது தற்போது சவாலாக உள்ளது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...