*Budget 2024: வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல,எதிர்காலத்துக்கான திட்டம்-ஜனாதிபதி உரை!

Date:

மிகவும் நெருக்கடியான நாட்டையே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடு பொருளாதார ரீதியாக அனைத்து மட்டத்திலும் தோல்விகண்டிருந்தது. தற்போது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களை முன்வைத்தார்.

  • பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 10ஆயிரம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
  • ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ரூபாய்வரை அதிகரிக்கப்படும்.
  • பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அரச ஊழியர்களின் சம்பவத்தை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், வரியை அதிகரிக்க வேண்டும்.
  • அரச வரியை அதிகரிப்பதிலும் எதிர்ப்புகள் உள்ளன. அரச கட்டமைப்பை வலுப்படுத்த வரி வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகும். 93 மில்லியன் அரச ஊழியர்களுக்கு தற்போது அவசியமாகும்.
  • அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக அடுத்த ஆண்டுக்கு 283 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாய் (விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்) அதிகரிக்க முன்மொழிவு.
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல மாறாக எதிர்காலத்துக்கான திட்டம்.
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்கான நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் தவணை முறையில் வசூலிக்கப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.
  • ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது.
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
  • ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்கைக்கு எதிரானது.
  • பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மீண்டுள்ளது. கடின உழைப்புக்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டனர்.
  • நாட்டின் நலனுக்காக அனைவரும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
  • பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு வெற்றிகரமாகக் குறைத்தமையே நாட்டின் மீட்சிக்குக் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...