‘COP 28’ மாநாட்டில் கலந்துகொள்ள டுபாய் செல்கிறார் ஜனாதிபதி!

Date:

Cop28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.

நாளை வியாழக்கிழமை (30) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று யோசனைகளை முன்வைக்க உள்ளார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதே இலங்கையின் பிரதான முன்மொழிவாகும்.

வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் சிரமப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் இலங்கையிலிருந்து 20 இளைஞர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி தலைமையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மற்றும் ஜனாதிபதியின் வெளிவிவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே உட்பட மேலும் சில முக்கிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...