இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் கோரியதையடுத்து, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான அமர்வுகளை இடைநிறுத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தீர்மானித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்த விசேட அறிக்கையை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முன்மொழிந்தார்.
அதன் பிரகாரம் விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.