இலங்கையின் ஹலால் அங்கீகார சபை (HAC), இலங்கையின் தேசிய கைத்தொழில் சபையினால் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
தேசிய பொருளாதார வளர்ச்சியின் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹலால் தரங்களுக்கு இணங்க, இலங்கையில் உள்ள பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்கும் ஒரே அமைப்பாக இலங்கையின் ஹலால் கவுன்சில் காணப்படுகிறது.
முஸ்லிம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க ஹலால் பொருட்களுக்கான உத்தரவாதத்தை வழங்குவதற்காக இலங்கையில் உள்ள சில தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் முயற்சியின் காரணமாக இந்த கவுன்சில் நிறுவப்பட்டது.