‘எனது மகள் காசாவில் ராணியாக இருந்தாள்’: ஹமாஸிடம் சிறைபட்ட இஸ்ரேலிய பணயக் கைதியின் உருக்கமான நன்றி கடிதம்!

Date:

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த தாயும் மகளுமான டேனியல் மற்றும் எமிலியா ஆகியோர், ஹமாசினால் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதற்கு முன்பாக அவர்கள் ஹமாசின் மனிதாபிமானத்தை பாராட்டி எழுதிய நன்றி கடிதத்தை அல்ஜெஸிரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்தக்கடிதம்  முழுஉலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதை தமிழ் உலகிற்கும் வாசகர்களுக்கும் தருகிறோம்….!

நாங்கள் நாளை உங்களிடமிருந்து பிரிந்து விடுவோம் (விடுவிக்கப்பட்டு விடுவோம்) என்று தோன்றுகிறது .

ஆனால் என் இதயத்திலிருந்து இப்போது நன்றி சொல்ல விரும்புகிறேன். என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்காக,
நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள்.

அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைக்குள் அனுமதித்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல நல்லவர்கள் மற்றும் அன்பானவர்கள் என்பதை அவள் ஒப்புக்கொள்கிறாள்.

நன்றி, நன்றி, பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவழித்த பல மணி நேரங்களுக்கு நன்றி. அவளை பொறுமையாக கையாள்வதற்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் எல்லாவற்றையும், அது உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் கூட கிடைத்ததை அவளுக்குத் தந்ததற்கு நன்றி.

குழந்தைகள் சிறைபடகூடாது ஆனாலும் உங்களுக்கு நன்றி, நாங்கள் சந்தித்த பிற அன்பான மக்களுக்கும் நன்றி.

உங்கள் செயல்களினால் என் மகள் தன்னை காசாவில் ராணியாக கருதினாள். ஒட்டுமொத்தமாக அவள் உலகின் மையமாக உணர்கிறாள். பணயக் கைதியாக எங்களின் நீண்ட பயணத்தில், ராணுவம் முதல் தலைமை வரை, அவளை மென்மையுடனும், பாசத்துடனும், அன்புடனும் நடத்தாத ஒருவரைக்கூட நாங்கள் உங்களிடம் சந்தித்ததில்லை.

அவள் நிரந்தர உளவியல் அதிர்ச்சியுடன் இங்கிருந்து வெளியேறிவிடாமல், அன்புடன் நடத்தப்படுவதற்கு நான் என்றென்றும் சிறைகைதியாக இருந்தாலும் நன்றியுணர்வுடன் இருப்பேன்.

நீங்கள் தனிப்பட்ட முறையில் கையாண்ட இக்கட்டான சூழ்நிலையிலும், காசாவில் நீங்கள் அனுபவித்த பெரும் இழப்புகளையும் மீறி, இங்கு கொடுக்கப்பட்ட உங்கள் அன்பான செயல்களை நான் நினைவில் கொள்கிறேன்.

இந்த உலகில், நாம் நல்ல நண்பர்களாக இருப்பதையே உண்மையிலேயே நான் பாராட்டுக்குறியதாக விரும்புகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமும் அன்பும் நிலவ வாழ்த்துகிறேன். மிக்க நன்றி!

அன்புடன்…
டேனியல் மற்றும் எமிலியா.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...