ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமயத் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களை, கடந்த 16ம் திகதி ஸ்ரீ லங்கா ஷரிஆ கவுன்சிலின் ஆயுட்கால தலைவரும், பஹ்ஜதுல் இப்ராஹீமியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் தேசமான்ய ஹஸ்புல்லாஹ் அப்துல் காதிர் பஹ்ஜி உத்தியோகப்பூர்வமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப், ஜாமிஉல் கைராத் மஸ்ஜித் பிரதம இமாம் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் ஏ.எச்.எம். மஹ்தி ரவ்லி மற்றும் நியூஸ்நவ் மீடியாவின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலாநிதி ஹஸன் மௌலானா 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு சர்வமதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.