காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் தொடங்கியது: ஏவுகணை தாக்குதல், துப்பாக்கிச்சூடு இருக்காது!

Date:

ஹமாஸ் -இஸ்ரேல்  போர்  தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பணயக் கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டின.

இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததுடன் ஹமாஸ் அமைப்பினரும் பணயக் கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பினரும் பணயக் கைதிகளைவிடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். கத்தார் இதற்கான மத்தியஸ்த ஏற்பாட்டை செய்தது.

விடுவிக்கப்படும்  பணயக் கைதிகளின் பட்டியல் இஸ்ரேலுக்கு கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தாது.

அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பலஸ்தீனர்களை விடுதலை செய்ய இருக்கிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...