காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: கடற்கரையில் விளையாடிய குழந்தைகள்

Date:

காசா-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த குழந்தைகள்  கடல் அலையில் துள்ளி குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், மேலும் 11 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த குழந்தைகள் கடல் அலையில் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் இடையே கடந்த மாதம், 7ம் திகதியிலிருந்து போர் நடந்து வந்தது.

பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கத் தலையீடு, கத்தார், எகிப்து மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்கள், குழந்தைகள் என மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. பதிலுக்கு இன்று (28) 33 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...