சிறைச்சாலையில் 23 சிசிரிவி கமராக்களை உடைத்த கைதி: விசாரணைகள் ஆரம்பம்!

Date:

பூஸ்ஸ சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த 23 சிசிரிவி கமராக்கள் கைதி ஒருவரால் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளார்.

அண்மையில் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உடற்பயிற்சிக்காக வெளியே அழைத்துச் செல்ல கதவுகள் திறக்கப்பட்ட போது சிறைச்சாலையின் சுவரில் ஏறியுள்ளார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த 23 பாதுகாப்பு கமராக்களை அவர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு, கைதியின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் சிறைச்சாலை அத்தியட்சகரின் விசாரணையின் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் சிறை கண்காணிப்பாளர் ஒருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த கைதியை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே இதற்கு பிரதான காரணமாகும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு பேருக்கு பணி இடைநிறுத்தக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...